ICC Men's T20 World Cup தொடரின் அரையிறுதிப் போட்டியில் 33 பந்துகளில் சதம் அடித்த Finn Allen, நான்கு பிரமாண்ட சாதனைகளை படைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் New Zealand national cricket team மற்றும் South Africa national cricket team அணிகள் மோதின.
Mitchell Santner தலைமையிலான நியூசிலாந்து அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.
ஃபின் ஆலன்
தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய Finn Allen, 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடித்து 33 பந்துகளில் சதமடித்து அதிரடி காட்டினார்.
12.5 ஓவர்களில் 173/1 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது.
4 பிரமாண்ட சாதனைகள்..
இந்தப் போட்டியில் சதம் அடித்த Finn Allen, டி20 உலகக்கோப்பையில் நான்கு முக்கிய சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
அதிக சிக்சர்கள்
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை 20 சிக்சர்கள் அடித்துள்ள ஆலன், ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.
இரண்டாவது இடத்தில் 19 சிக்சர்களுடன் Shimron Hetmyer உள்ளார்.
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்
அரையிறுதியில் 8 சிக்சர்கள் அடித்த ஆலன், டி20 உலகக்கோப்பை இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் ஒருவராக சாதனை படைத்தார்.
அதிவேக சதம்
33 பந்துகளில் சதமடித்ததன் மூலம், Finn Allen டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரராக புதிய சாதனை படைத்தார்.
அதிக பவுண்டரிகள்
10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தம் 18 பவுண்டரிகளை அடித்து, 2012ஆம் ஆண்டு Brendon McCullum படைத்த சாதனையை சமன் செய்து ஆலன் அசத்தியுள்ளார்.

